நந்திக்கடல் பகுதியில் மர்மம்..! இராணுவம் மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன..?

Report Print Murali Murali in பாதுகாப்பு

நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமானது என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கேப்பாப்பிலவு கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிக்கவுள்ளதாகவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், படை முகாம் குறித்த பகுதியில் இருந்து அகற்றப்படும் சந்தர்ப்பத்தில் அந்த காணிகள் மக்களிடம் கைளிக்கப்படும் எனவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் நந்திக்கடல் முக்கிய பங்கை வகித்துள்ளது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக நிலைகொண்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவரது உடல நந்திக்கடல் பகுதியில் இருந்தே உடல் கிடைக்கப்பெற்றதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த பகுதியினை இராணுவத்தினர் விடுவிக்காமல் தொடர்ந்தும் முற்றுகையிட்டிருப்பது பலருக்கும் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் ஏதேனும் மர்மங்கள் இருக்க கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments