யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை என்ன?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
215Shares

போருக்கு பிந்திய யாழ் குடாவின் நிலைமை குறித்து அந்தப் பகுதி பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் விபரித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை மற்றும் வவுனியா தலைமை தூதுக்குழுவின் தலைவரான Claire Meytraud மற்றும் Wilson Mondal ஆகியோர் இன்று மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழின் தற்போதைய சூழல், இராணுவ உறவு மற்றும் போருக்கு பிந்திய சவால்கள் தொடர்பில் யாழ் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லிணம் தொடர்பிலான இராணுவத்தினரின் செயற்பாடு குறித்து இந்த சந்திப்பின் போது இராணுவ தளபதி விபரித்துள்ளார்.

ஒரு சுமுகமான பேச்சுவார்த்தையை தொடர்ந்து பலாலி விஜயத்தின் போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசொன்றையும் இராணுவ தளபதி வழங்கியுள்ளார்.

Comments