கடந்த ஜனவரி மாதம் நாட்டினுள் குற்றச்செயல்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் குற்றத் தடுப்பு பணியகம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அனுப்பிய அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நாட்டினுள் குற்றச் செயல்கள் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில், புத்தாண்டு பிறப்பின் பின்னர் ஜனவரியில் சடுதியாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் குற்றச் செயல்கள் குறைந்து காணப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நுகேகொடை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலேயே ஆகக்கூடுதலான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.