நோர்வே போதைப்பொருள் வர்த்தகர் இலங்கையில்! தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
694Shares

பாரிய அளவிலான சர்வதேச போதைப்பொருள் வர்த்தகராக கருதப்படுகின்ற நோர்வே நாட்டவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜர்மன்ட் கெபலன்ட் என்பவர் தொடர்பில் இலங்கை பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

அவர் அண்மையில் மாலைத்தீவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நபர் ஹஷிஸ் என்ற போதைப்பொருளை பாரிய அளவில் விற்பனை செய்யும் நபராக கருதப்படுகின்றார்.

இது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்போதுவரையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவர் இலங்கைக்கு வந்துள்ளதற்கான எந்தவொரு தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது தொடர்பில் சார்க் நாடுகளின் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பிரிவிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments