கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு!

Report Print Ramya in பாதுகாப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 20ஆம் கடற்படைத் தளபதியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரவீந்திர விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டிருந்தார்.

இவரது பதவிக் காலம் நாளையுடன் பூர்த்தியாகவிருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன 1980ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி சேவையில் இணைந்து கொண்டிருந்தார்.

விஜேகுணவர்தன றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் சேவைக் காலம் இன்று முதல் அமுலாகும் வரையில் 6மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் சீன அபிவிருத்தித்திட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கடற்படைத் தளபதி ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியதாகக் குற்றம் சுமத்தி பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments