யாழில் பொலிஸாரின் கெடுபிடி அதிகரிப்பு

Report Print Thamilin Tholan in பாதுகாப்பு
64Shares

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் பொலிஸாரின் கெடுபிடி இன்று புதன்கிழமை(22)அதிகரித்துக் காணப்படுகிறது.

குறிப்பாக யாழின் புன்னாலைக்கட்டுவன் மற்றும் உரும்பிராய்ப் பகுதிகளில் இன்றுபிற்பகல் முதலே பொலிஸாரின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் இன்று இரவுயாழ்.புன்னாலைக்கட்டுவன் சந்திப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய சுன்னாகம்பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் பொலிஸாரின்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் தீவிர கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவோரை வழிமறித்துத்தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இன்று இரவு உரும்பிராய்ச்சந்திப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப் படையினர் சிலரும்நிறுத்தப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தைத்தோற்றுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments