இலங்கை விமானப் படையினரின் சாகசங்களை காணவேண்டுமா..? இதோ..

Report Print Ramya in பாதுகாப்பு

இலங்கை விமானப்படையின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்மலானை விமானப்படை முகாம் வளாகத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றுவரும் விமானப்படை கண்காட்சி கூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்த வைக்கப்பட்டது.

கண்காட்சிக் கூடத்தைத் நேற்று திறந்து வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமானப்படையினரின் சாகசங்களையும் பார்வையிட்டார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விமானப்படையினரின் ஆற்றல்களும், திறமைகளும் முக்கியத்துவம் பெறும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விமானப்படையினரின் செயற்பணிகள் பற்றிய அறிவூட்டல் மற்றும் விமானப்படையினரின் வளங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அவசர நிலைமைகளின்போதும், இயற்கை அனர்த்தங்களின்போதும் விமானப்படையினர் பொதுமக்களுக்காக செயற்படும் விதம் குறித்தும் கண்காட்சிப்படுத்ப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினரின் சாகசங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

விமானங்கள், விமான சாகசங்கள், பரசூட் சாகசங்கள், விசேட ரெஜிமென்ட் படையணியினால் முன்வைக்கப்படும் யுத்த மாதிரிகள், இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் கூடிய இக் கண்காட்சி மற்றும் கொண்டாட்டங்கள்

குறித்த கண்காட்சி நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரவு 11.00 மணி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோரும் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments