நாகப்பட்டினம் அருகே இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது!

Report Print K.Rangan in பாதுகாப்பு
127Shares

நாகப்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையிலிருந்து 50 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 10 மீனவர்களை, இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.

இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் காரைக்கால் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இந்திய கடல் எல்லையில் ஆதாம் பாலம் என்ற இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இந்தத் தாக்குதலில் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்த்து பலியானார். இதனால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றதையடுத்து இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக கடலோர காவல் படை கைது செய்துள்ளது.

Comments