மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு நரம்பில் பாதிப்பு காணப்படுவதாக சில வைத்திய அறிக்கைகளை சமர்ப்பித்து. வைத்தியசாலையில் தங்கியிருக்க அனுமதி கோரப்பட்டது. தற்போதும் அவ்வாறானதொரு சில நடிப்புகளை மேற்கொள்வதற்கு அவர் ஆயத்தமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு முன்னர் துமிந்த சில்வா, தெமட்டகொட சமிந்த உட்பட 5 கைதிகள் தப்பி செல்வதற்கு திட்டமிட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் உட்பட நீதிமன்றில் தகவல் வெளியிட்டிருந்தனர்.
சிறைச்சாலை வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய துமிந்த சில்வாவை ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு திட்டமிட்டமை மற்றும் அங்கு சில செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் அந்த நடவடிக்கை தடுக்கப்பட்டது.
தற்போது துமிந்தவுக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடக வாயிலாக பிரச்சாரம் செய்து, அதனூடாக அனுதாபம் பெற்றுக்கொள்ள துமிந்த திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துமிந்த பெருமளவு பணத்தை செலவு செய்வதாக கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனை கொலை செய்தமைக்காக துமிந்த சில்வாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.