கொழும்பின் பொரளை ஆனந்த ராஜகருண மாவத்தை பகுதியில் சற்றுமுன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சண்டைக்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.