பத்தொன்பது வயது இளைஞரின் விளையாட்டு விபரீதமானது: உயிரைக் காவு கொண்ட விபத்து

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

மிக வேகமாக உந்துருளியை செலுத்திய இளைஞர் ஒருவரின் விளையாட்டு விபரீதமாக மாறி உயிரைப் பறித்துள்ளது.

நேற்றைய தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக போகும் காட்சியை யக்கல, இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த லஹிரு ஷெஹான் என்ற 19 வயதுடைய இளைஞர் பதிவி செய்யுமாறு நண்பரிடம் கூறி மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியுள்ளார்.

எனினும், எதிரே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றோடு மோதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்தக் காட்சி உயிரிழந்தவரின் நண்பரின் கைபேசியில் பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞரின் உயிரிழப்பு யக்கல, இம்புல்கொட பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments