சமயங் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது!

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

சமயங் எனப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி களுத்துறை சிறைச்சாலைக்கு அருகாமையில் வைத்து சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமயங் உள்ளிட்ட ஐந்து பாதாள உலகக்குழு உறுப்பினர்களும், இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அங்கொட லொக்கா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கருதப்படுகின்றார்.

அங்கொட லொக்கா மற்றும் அவரது மற்றுமொரு சகாவான லெடியா ஆகியோரை நேற்று சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலிக் கடவுச்சீட்டு மூலம் வேறு நாடு ஒன்றுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சயமங் உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னர் அங்கொட லொக்கா மற்றும் லெடியா ஆகியோர் கடல் வழியாக இந்தியாவிற்கு சென்று அங்கு தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுக்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

சமயங் கொலையை திட்டமிட்ட தெவுந்தர மதுஸ் என்பவர் டுபாயில் வசித்து வருவதாகவும் அவரிடம் செல்லும் நோக்கில் அங்கொட லொக்காவும், லெடியாவும் போலிக் கடவுச்சீட்டுக்களை தயாரித்துள்ளனர்.

சென்னையில் கைதான அங்கொட லொக்கா மற்றும் லெடியா ஆகியோர் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

Comments