பிரித்தானியாவில் பாரிய குண்டுவெடிப்பு - 22 பேர் பலி - இலங்கையர்களுக்கு பாதிப்பா?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பிரித்தானியாவில் பாரிய குண்டொன்று வெடித்த அனர்த்தம் காரணமாக 22 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்ளக விளையாட்டு அரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ள நிலையில் அதனை பார்ப்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு அனர்த்தம் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் எவரும் உயிரிழந்ததாக இதுவரை எந்த தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Comments