36 கட்டடங்களை உடனடியாக அகற்ற தீர்மானம்

Report Print Ramya in பாதுகாப்பு

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட 36 கட்டடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் அண்மையில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, குறித்த கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் எசல இதமல்கொட தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டடங்களை உடன் அமுலாகும் வகையில் அகற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறியுள்ளார்.


You may like this video


Comments