மாவனெல்லையில் மண் மேடு சரிவு - ஒருவர் பலி - பலர் புதைந்திருக்கலாம் என அச்சம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த இடத்தில் பாரிய மண் மேடு ஒன்று சரிந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூவரை மீட்பதற்கான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் பலர் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments