பதினான்கு கோடி இடிதாங்கியை கொள்ளையிட்ட நால்வர் கைது: பொலிஸ் உத்தியோகஸ்தர் மாயம்

Report Print Aasim in பாதுகாப்பு

கொழும்பு -07ல் உள்ள கோடீஸ்வரர் ஒருவரிடமிருந்து பதினான்கு கோடி ரூபா பெறுமதியான இடிதாங்கியொன்றைக் கொள்ளையிட்ட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பில் புராதனப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமொன்றின் உரிமையாளரிடம் இருந்தே குறித்த இடிதாங்கி துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

களுத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அதனை பதினான்கு கோடி ரூபாவுக்கு விற்றுத்தருமாறு தெரிவித்து, நீர்கொழும்பு வர்த்தகரிடம் கையளித்திருந்தார்.

இதுதொடர்பான தகவல் அறிந்து கொண்ட கும்பல் ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் குறித்த வர்த்தகரை அச்சுறுத்தி இடிதாங்கியைக் கொள்ளையிட்டுச் சென்றிருந்தது

கொள்ளையிடப்பட்ட இடிதாங்கி சுமார் 300 வருடங்களுக்கும் மேலாக பழைமையானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிசார் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கொள்ளைக்கும்பலுக்குத் தலைமை வகித்த பொலிஸ் உத்தியோகத்தர் தப்பிச் சென்று மாயமாகியுள்ளார்.

அவரைத் தேடி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.