காணாமல் போனவர்களை தேடும் பணியில் முப்படையினர் தீவிரம்!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தவிர, காணாமல் போனவர்கள் 91 பேர் என்றும் அவர்களை இன்னமும் மீட்கவில்லை என்றும், 72 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் மைத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை பெய்ததன் விளைவினால் தென் மாகாணம் உட்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, 39, 092 பேர் 239 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், நாட்டின் நிலைமை சீராகும் வரை அவர்கள் அங்கு தங்கியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ் அனர்த்தத்தின் போது 1999 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 10, 867 வீடுகள் பகுதியளவில் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பில் முப்படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.