யாழ்ப்பாணத்திற்குள் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகள்! சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

புலம்பெயர் புலி செயற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகள் போன்று யாழ்ப்பாணம் செல்வதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் புலிச் செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணம் சென்று முன்னாள் போராளிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பிரிட்டன் புலம்பெயர் புலி ஆதரவு தரப்பு வடக்கின் இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளனர். எனினும், இந்த விடயம் குறித்த அதிகாரிகள் இதுவரையில் உரிய கவனம் செலுத்தவில்லை.

விடுதலைப் புலிகளின் செய்மதிப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் நோர்வேயிலிருந்து யாழ்ப்பாணம் சென்று முன்னாள் போராளிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கனேடிய புலம்பெயர் புலி செயற்பாட்டாளர் ஒருவரும் யாழ்ப்பாணம் சென்று முன்னாள் புலி உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

பல நாடுகளிலிருந்து செயற்பட்டு வரும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில யாழ்ப்பாணத்தில் இயங்கி வருவதாக சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.