ரணிலின் பாதுகாப்பு பிரிவு வாகனம் விபத்து! வெள்ளவத்தை பொலிஸார் நடவடிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவு வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹைலெவல் வீதியின் சுற்று பாதைக்கு அருகில் நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்திற்கு பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலைமை தீவிரமல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காயமடைந்த நபரின் மணிக்கட்டு எலும்பு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.