கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் ஆரம்பமானது.

இலங்கை படையினர் மூலம் சர்வதேச மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த உரையாடல்களை ஏற்படுத்துவதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு துறை சம்பந்தமான நிபுணர்களின் பங்குபற்றலுடன் இந்த ஆண்டும் நடைபெறுகிறது.

7 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் வெளிநாட்டு புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையை சேர்ந்த முன்னோடிகள் என 800 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அரச நிர்வாகம், அரச பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எதிர்பாராத அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சர்வதேச தொடர்புடன் வேகமாக பரவி வரும் அடிப்படைவாத வன்முறை மற்றும் நூதன பாதுகாப்பு பிரச்சினை சம்பந்தமாக மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

இந்தியாவை கேந்திரமாக கொண்ட பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான இராஜதந்திரிகள், கொழும்பில் பணியாற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு இராஜதந்திர அதிகாரிகள் உட்பட உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ பிரதிநிதிகள் மற்றும் 35 நாடுகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, அமெரிக்காவின் ஓய்வுபெற்ற அட்மிரல் வில்லியமி ஜே, பெலோன், இந்தியாவின் சிரேஷ்ட இராணுவ அதிகாரியாக ஓய்வு பெற்ற ஜெனரல் அசோக் மேத்தா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers