புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? அமெரிக்காவுக்கு விளக்கமளித்த இலங்கை

Report Print Murali Murali in பாதுகாப்பு

2009ஆம் ஆண்டுக்கு முன்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது குறித்து இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு விளக்கமளித்துள்ளது.

இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் அமெரிக்க கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வில்லியம் ஜே போலன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெறும், பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை வந்துள்ள அமெரிக்க கடற்படையில் முன்னாள் தளபதி அட்மிரல் வில்லியம் ஜே போலன் இன்று பிற்பகல் இலங்கை இராணுவத் தளபதியை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது வன்முறை, தீவிரவாதம், சமாதான நுட்பங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2009ஆம் ஆண்டுக்கு முன்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது குறித்து இராணுவத்தளபதி விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டின் போது அமெரிக்க கடற்படையில் முன்னாள் தளபதி அட்மிரல் வில்லியம் ஜே போலன் முக்கிய உரையொன்றை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.