நாட்டு மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாட்டு மக்களை இன்றிரவு அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்தால் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நிலையம் அறிவித்துள்ளது.

மழை பெய்து மண் சரிவு ஏற்படும் நிலை காணப்பட்டால் அவசியமான முறைகளை பின்பற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

இன்று இரவு களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Latest Offers