பாதுகாப்பு தந்திரோபாயத்தை கூட்டாக இணைந்து வகுக்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சின் செயலர்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

கூட்டாக இணைந்து தான் பாதுகாப்பு தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் பாதுகாப்பு மாநாடு ஆரம்பமாகியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் பயங்கரவாதச் சம்பவங்களும், வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. தேசிய பாதுகாப்பில் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக எதிர்வு கூற முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாப்பு தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வது பொருத்தமானதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers