வடகொரியாவினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் வங்கி கட்டமைப்புக்குள் ஊடுருவ வடகொரியாவின் ஆதரவு பெற்ற ஹோக்கர்கள் முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட கொரிய அரசுக்கு ஆதரவான லாசரஸ் என்ற ஹேக்கர் குழுவினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த ஹேக்கர் குழுவினால் சர்வதேச நிதி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு எதிராக பல உயர்ந்த இணைய தாக்குதல்களை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.

அண்மையில் தாய்வான் வங்கி ஒன்றின் கட்டமைப்புக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள் பல மில்லியன் டொலர்களை கொள்ளையிட்டனர். இதனுடன் லாசரஸ் குழுவுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்களின் SWIFT என்ற வலையமைப்பின் மூலம் பணம் திருடப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திருடப்பட்ட பணம் இலங்கை மற்றும் கம்போடியா உட்பட பல வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லாசரஸ் குழுவின் பல்வேறு வங்கி குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய வங்கி ஊடுறுவல், பங்களாதேஷ் வங்கி கொள்ளையை நினைவூட்டுவதாக BAE அமைப்புகளின் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்காக பயன்படுத்தப்பட்ட இணைய வலையமைப்புகளே இதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாய்வான் வங்கி ஊடுருவலுக்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருள்கள் இதற்கு முன்னர் போலந்து மற்றும் மெக்ஸிகோ வங்கிகளுக்கு எதிராக லாசரஸ் குழுவினால் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.