கொழும்பில் சிக்கிய சர்வதேச சந்தேகநபர்! அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அமெரிக்காவுக்கு தேவையான ரஷ்ய பிரஜை ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெனோகின் பெர்டோவ் என்ற ரஷ்யப் பிரஜையே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மெனோகினுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கிற்கு எதிராக கைது செய்யப்படுவதனை தவிர்ப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிவப்பு அறிக்கையின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கான தடைகள் இல்லை என்பதனால் குற்ற விசாரணை திணைக்களம் அவரைக் கைது செய்துள்ளது.

ரஷ்யப் பிரஜையை கைது செய்வதற்கு சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள், கொழும்பு வைத்தியசாலைக்கு நீதிபதியை வரவழைத்துள்ளனர். இதன்போது குறித்த ரஷ்யப் பிரஜையை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவினால் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ரஷ்யா தமது நாட்டிற்கு அவரைக் கோரியுள்ளது.

குறித்த ரஷ்யப் பிரஜையை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதா இல்லையா என்ற தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தீர்மானத்தை பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவினால் செயற்படுத்தப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்காக காத்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.