நாளுக்கு நாள் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்: மக்கள் கவலை

Report Print Mubarak in பாதுகாப்பு

திருகோணமலை - மூதூர், முன்னம்போடி வெட்டை பகுதியில் யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக விவசாயிகளும், பிரதேச மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நேற்றிரவு யானைகளின் அட்டகாசத்தினால் இரண்டு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

முன்னம்போடிவெட்டை, கிளிவெட்டி மற்றும் 58ஆம் கிராமம் போன்ற பகுதிகளில் வாழைத்தோட்டங்கள், தென்னம் தோட்டங்கள், பயிர்ச் செய்கைகளையும் தினமும் யானைகள் துவம்சம் செய்து வருகின்றன.

கடந்த வாரம் மூன்று வீடுகளையும் வாழைத்தோட்டம் ஒன்றினையும் யானைக் கூட்டங்கள் வந்து அழித்திருந்தன.

எனவே, இவ்விடயத்தில் வனஜீவராசி பாதுகாப்பு திணைக்களமும், பொலிஸாரும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.