கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு இடையில் மோதல்! ஐவர் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 5 மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக ஹோமாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அழைத்து செல்லப்பட்ட மாணவர்களிடம் விசேட வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோமாகம பிரதேசத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு இடையில் நேற்று காலை ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றுள்ளது.

இந்த மோதலினால் 3 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.