6 மாணவர்களும் 10 மாணவிகளும் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Shalini in பாதுகாப்பு

மொனராகலை - சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 மாணவர்களுக்கும் 10 மாணவிகளுக்கும் இன்று ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வொன்றில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கொவிதுபுர பொலிஸாரால் சியாம்பலாண்டுவ பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.