ஈரான் - ஈராக் எல்லையில் ஏற்பட்ட அதிர்வு இலங்கையிலும் உணரப்பட்டதாக அறிவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஈரான் - ஈராக் எல்லையில் ஏற்பட்ட நில அதிர்வு இலங்கையிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட அதிர்வு இலங்கையின் நில அதிர்வு அளவீடுகளிலும் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

7.3 ரிக்டர் அளவிலான இந்த அதிர்வில் 450 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் 7000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த வருடத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நில அதிர்வாக இது பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த அதிர்வு ஹக்மன, மஹகனதராவ மற்றும் பல்லேகலயில் அமைந்துள்ள நில அதிர்வு அளவீடுகளில் பதிவாகியுள்ளது.

இந்திய பெருங்கடலில் ஏற்படுகின்ற நில அதிர்வுகள் தொடர்பிலேயே இலங்கை அவதானம் செலுத்த வேண்டும் என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.