8 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: ஒருவர் கைது

Report Print Thirumal Thirumal in பாதுகாப்பு

மஸ்கெலியா - அப்புகஸ்தென்ன மேல் பிரிவு தோட்டத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அப்புகஸ்தென்னை பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் பாடசாலையில் நடைபெற்ற பிரத்தியேக வகுப்புக்குச் சென்று விட்டு, வீடு திரும்பும் போது குறித்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்தேகநபரான காவலாளி ஒருவரை நேற்று இரவு பத்து மணியளவில் கைது செய்யதுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்திய அறிக்கை கிடைத்த பின் சந்தேகநபர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.