மைத்திரியின் உயிருக்கு ஆபத்தா? ஆயுதங்கள் பலவற்றுடன் இருவர் கைது!

Report Print Dias Dias in பாதுகாப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அண்மையிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பை அண்மித்த பத்தரமுல்ல - கொஸ்வத்த பகுதியில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வுக்கு ஆரம்பிப்பதற்கு முன் வழமைபோன்று ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், குறித்த நிகழ்வு நடைபெறுகின்ற இடத்தை அண்மித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது துப்பாக்கித் தோட்டாக்கள் 20, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ரிவோல்டர், இரண்டு கஜமுத்துக்கள், வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்கள் 4 என்பவற்றை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் பத்தரமுல்ல - தலங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளுக்கு அண்மையிலும், நிகழ்வுகளிலும் ஆயுதங்களுடன் நடமாடிய நபர்களும், அண்மித்த பகுதிகளில் இருந்து ஆயுதங்கள் மீட்பு செயற்பாடுகளும் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது தென்னிலங்கை அரசியற்களத்தில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதியின் தலைமையில் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட விடயம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளதகாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers