ஹெலிகொப்டரிலிருந்து வீசப்பட்ட பக்கெட்டுகள்! அச்சத்தில் பன்னிப்பிட்டிய மக்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகொப்டரில் இருந்து தேயிலை பக்கட்டுக்களை பறக்கவிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பன்னிப்பிட்டிய பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் நிறுவனத்திற்கு காற்றில் துண்டு பிரசுரங்களை பறக்கவிடுவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை மீறி தேயிலையை பறக்கவிட்டு குற்றச் செயலை செய்துள்ளனர்.

இதன் காரணமாக பொது மக்கள் காயமடைவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் நிமல்சிறி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நேற்று சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ஒரு நிறுவனம் தனது நிறுவன பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர நடவடிக்கைக்காக மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளியதென அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.