பிரபாகரனுக்கு வாழ்த்து கூறி வடமராட்சியில் சுவரொட்டிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வடமராட்சியின் சில பகுதிகளில் விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எனினும் இன்று காலையில் அவை பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகள் நாளை மறுதினம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உணர்பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை நாளையதினம் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகள் பல பகுதிகளில் கொண்டாப்படவுள்ளது.

இதனைமுன்னிட்டு வடமராட்சிப் பகுதியில் நேற்றிரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.