புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு வீதியின் ஆபரண கடை ஒன்றிலேயே இவ்வாறு தீடீரென தீப்பற்றியுள்ளது.
பொலிஸார் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவு இணைந்து முழுமையாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.