ஜெனிவாவில் சிக்கிய ஆவா குழுத்தலைவர்! இரகசியமாக யாழ். வந்து சென்றது எப்படி?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

யாழ். குடாநாட்டில் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவின் தலைவர் சுவிட்சர்லாந்தில் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள கைக்கடிகார தொழிற்சாலையில், ஆவா குழுவின் தலைவர் வேலை செய்வதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆவா குழுவின் தலைவரை இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அண்மையில் ஆவா குழுவின் தலைவர் சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சென்றதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை புலனாய்வு பிரிவுகளுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. ஜெனீவாவில் உள்ள தூதரகத்தில் இலங்கை புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் செயற்படாமையே இதற்கு காரணமாகும்.

சுவிஸில் செயற்படும் ஆவா குழுவின் தலைவர் அனுப்பும் பணத்தின் மூலம், யாழில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக குறித்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.