வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல மாட்டேன்!' - நீதிமன்றத்தில் நளினி மனு

Report Print Samy in பாதுகாப்பு

பரோல் கிடைத்தால் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வேன் என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு தவறானது' என்று நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி தன் மகள் திருமணத்துக்காகப் பரோல் கோரியிருந்தார்.

நளினியைப் பரோலில் விட்டால் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விடுவார் என்று தமிழக அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பரோலில் வந்தால் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல மாட்டேன் என்று நளினி தரப்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு அவர் தாக்கல் செய்துள்ள விளக்க மனுவில் ‘பரோலில் வந்தால் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல மாட்டேன். பரோல் கிடைத்தால் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வேன் என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு தவறானது. பேரறிவாளனுக்குத் தந்தது போல மகளின் திருமண ஏற்பாடுக்காக ஆறு மாத பரோல் தர வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- Vikatan

Latest Offers