கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த விபரீதம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடு காரணமாக பயணிகள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பாணந்துறை கோவிலின் பிரதான குருக்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று சென்னை செல்ல, விமான நிலையம் சென்றுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரிகளின் செயற்பாடு காரணமாக விமானம், பயணிகளை விட்டுச் சென்றுள்ளது.

சென்னை செல்ல விமான நிலையத்திற்கு வந்த போது 6 ஆம் இலக்க பகுதிக்கு செல்லுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கமைய 6ஆம் இலக்க பகுதியில் காத்திருந்த போது 6ஆம் இலக்கம் அல்லது 10ஆம் இலக்க பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். 10ஆம் இலக்க பகுதி சென்ற போது விமானம் சென்று விட்டது. பயணிகள் தாமதமாக வருகை தந்துள்ளதாக விமான சேவையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமான சேவையின் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடே இதற்கான பிரதான காரணம் என பாதிக்கப்பட்ட பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Latest Offers