பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் துப்பாக்கிகளுடன் கைது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

கொலை மற்றும் கப்பம் பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு தலைவரான கொஸ்கொட சுஜி என்பவரின் பிரதான சகாவான பதுமா என்ற சந்தேகநபர் உட்பட மூன்று பேரை விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அம்பலாங்கொடை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகநபர்கள் மீட்டியாகொட, பட்டபொல, ஊருகஸ்ஹந்திய ஆகிய பிரதேசங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பிரபல பாதாள உலகக்குழுக்களின் தலைவர்களான கொஸ்கொடசுஜி மற்றும் கொஸ்கொட தாரக ஆகியோரின் குழுக்களை சேர்ந்த 16இற்கும் மேற்பட்டோர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.