பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் ஒருநாளில் 1281 பேர் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 1281 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

இன்று அதிகாலை 1 மணியில் இருந்து 5 மணி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட செயற்பாட்டில் 722 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தை புறக்கணித்தமையினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 6 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக நச்சு மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்பில் 586 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 கிலோக்கிராம் கஞ்சா மற்றும் 25 கிராம் ஹெரோயின் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 25000 லிற்றருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 14706 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 10 பொலிஸ் நாய்களும் இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.