மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

Report Print Ashik in பாதுகாப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு இன்று காலை முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாவட்டச் செயலகத்தினுள் செல்பவர்களது உடைமைகளும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகலுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் மாவட்டச் செயலக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.