இலங்கை பூராகவும் மின்சாரம் தடைப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்சார துறைசார் தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இல்லையெனில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்க ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு உட்பட சில கோரிக்கைகள் மின்சார சபை ஊழியர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு ஒன்றை கோரி மின்சார சபை ஊழியர்கள் 4 நாட்களாக பிரதான அலுவலகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கமைய இன்றைய தினம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை வரை செல்லும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாடு பூராகவும் மின்சாரம் தடைப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.