இராணுவத்தினரால் வருமானத்தை இழக்கும் வியாபாரிகள்

Report Print Gokulan Gokulan in பாதுகாப்பு

மன்னார், மடுரோட் சந்தியில் இராணுவத்தினர் மக்கள் உணவகம் என்ற பெயரில், ஒரு மாபெரும் உணவகத்தை பெரும் ஆட்பலத்துடன் வெற்றிகரமாக கடந்த 08 வருடங்களாக நடத்தி வருகின்றனர்..

இதே பகுதியில் பொதுமக்களும் பலசரக்குக் கடைகளையும், உணவகங்களையும் நடத்திவருகிறார்கள். எனினும் இராணுவத்தினரின் கடையினால் பொது மக்களின் கடைகள் பெரும் நஷ்டமடைந்து வருகின்றன.

இதேவேளை, இதன் விளைவாக இரண்டு கடைகள் மூடப்பட்டு விட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இராணுவம், உணவுகளை எங்களை விட குறைந்த விலையில் விற்பதாலேயே அங்கே தமிழ், சிங்கள மக்கள் கூடுகின்றனர் எனவும் அவர்கள் தங்களின் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரை வைத்து ஆட்பலத்துடன் பொழுது போக்கிற்காக நடத்தி வருவதால் குறைந்த விலையில் உணவுகளை விற்க முடிவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலை மாற வேண்டும் எனவும், இவர்களின் கடைகளை அகற்ற சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து எமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.