பொலிஸாரை தாக்கிய நபருக்கு நேர்ந்த கதி

Report Print Mubarak in பாதுகாப்பு

திருகோணமலை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி காயப்படுத்திய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே அடுத்த ஜனவரி மாதம் நான்காம் திகதி வரை குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை, மகமாயபுர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை பகுதியில் கடமையில் இருந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியதோடு, அவர்களின் கடமைக்கும் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.