கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம்: இளைஞரொருவர் கைது

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

கொழும்பு - 15, மட்டக்குளி பகுதியில் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளியைச் சேர்ந்த 24 வயதான குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவரை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நபரொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.