நபர் ஒருவரின் மோசமான செயல்! சி.சி.டி.வியில் பதிவான பகீர் காட்சிகள்

Report Print Shalini in பாதுகாப்பு

மொனராகலை நகரில் உள்ள பந்தயம் பிடிக்கும் இடத்தில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர் மீது, அருகில் நின்று கொண்டிருந்த நபர் யாரும் எதிர்பாராத நேரத்தில் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

குறித்த நபர் நீண்ட நேரமாக சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்ததுடன், யாரும் எதிர்பாராத நேரத்தில் தாம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட 49 வயதான நபர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை நடத்திய 54 வயதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.

இதன்போது அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நேரம் பார்த்து வெட்டிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கெமராவில் பதிவாகி உள்ளது.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..