சுமார் 150 அடி உயரத்திலிருந்து சரிந்து விழுந்த கற்பாறைகள்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

அக்கரப்பத்தனையிலுள்ள ஆகுரோவா தோட்டத்திலுள்ள குடியிருப்பு பகுதியொன்றில் சுமார் 150 அடி உயரத்திலிருந்து கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

இந்த சம்பவம் இன்று காலை 20 இற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், கடந்த காலங்களிலும் இவ்வாறான கற்பாறைகள் விழுந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் நாம் உரியவர்களிடம் தெரிவித்த போதிலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், தாம் மிகவும் பயத்துடனே வாழ்க்கை நடத்தி வருவதாகவும், விரைவில் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.