இளைஞனின் மோசமான செயல்! சி.சி.டி.வி கெமராவில் பதிவாகிய காட்சிகள்

Report Print Shalini in பாதுகாப்பு

தம்புள்ளையில் பிரபல தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், 5 இலட்சம் ரூபா பணத்தையும் 5 இலட்சம் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளையும் திருடியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

பட்டப்பகலில் குறித்த இளைஞன் மதில் ஏறி குதித்து குறித்த வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன.

இந்த காட்சிகளை ஆதாரமாக வைத்து சந்தேகநபரை தேடிவருவதாக தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.