பொலிஸாரை ஆயத்தப்படுத்தும் பணிகளில் பொலிஸ்மா அதிபர்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸாரை ஆயத்தப்படுத்தும் பணிகளில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேரடியாக களமிறங்கியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பக்கச்சார்பற்ற முறையிலும் தேர்தல் சட்டங்களை சரியான முறையில் அமுல்படுத்துவது குறித்தும் பொலிஸ் உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் கூட்டத் தொடர் ஒன்று மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த தெளிவுபடுத்தும் கூட்டத் தொடரில் பொலிஸ்மா அதிபர் நேரடியாக பங்கேற்று விளக்கம் அளித்து வருகின்றார்.

மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் இந்த தெளிவுபடுத்தும் கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அனைத்து மாகாணங்களிலும் இந்தக் கூட்டத் தொடர் நடத்தப்பட உள்ளது.

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், துணை பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகாரிகளுக்கு இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது.