இராணுவத்தினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு தொடர்பில், இராணுவத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினால் பயன்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ ஜெக்கட் ஒன்று முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய சகல பொருட்களும் பாதுகாப்பு பிரிவினரால் அழிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென மீட்கப்பட்ட ஜெக்கட்டினால், அங்கு கடமையிலுள்ள இராணுவத்தினருக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாரோ ஒருவரினால் ஜெக்கட் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.