சவுதி சிறையில் 200 இலங்கையர்கள்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

சவுதி அரேபியாவில் சுமார் 200 இலங்கையர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக அவர்களின் நிலைமைகளை ஆராய்ந்து வருவதாக சவுதிக்கான இலங்கையின் தூதுவர் அஸ்மின் தாசிம் தெரிவித்துள்ளார்.

சவுதியின் மதுபானம் தொடர்பான சட்டத்தை மீறியமை, ஒழுக்கத்தை மீறி நடந்து கொண்டமை ஆகிய பிரதான குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.